தமிழ் உலகின் பாரம்பரிய மொழிகளில் ஒன்று. தமிழ் மொழி உலகின் புகழ்மிக்க பாரம்பரிய இலக்கியங்களை கொண்ட மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 22 இந்திய மொழிகளில் தமிழ் ஒன்று மற்றும் 2004 ல் இந்திய அரசால் முதல் பாரம்பரிய மொழியாக அறிவிக்கப்பட்டது. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி”-நம் தாய்மொழியாம் தமிழை பேணிகாக்கும் பொருட்டும், நவீன தொழில்நுட்பங்களை தமிழ்மயமாக்க மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு இணையம்- முத்தமிழ் மன்றம் 18.02.2015 அன்று துவங்கப்பட்டது.
திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி கணினி துறையின் தமிழ் மன்றம் மற்றும் தர்மபுரி பண்பலை வானொலி நிலையம் இணைந்து நடத்திய "தனி மனித சுகாதாரமின்மைக்கு காரணம் - அலட்சியமே?அறியாமையே?" என்ற தலைப்பில் மாணவர் விழிப்புணர்வு பட்டிமன்றம் 05.03.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. திரு.அசோக் சிலம்பன், மருத்துவர், சரவணா மருத்துவமனை, சேலம் நடுவராக செயலாற்றி அறியாமையே என்ற நல்ல தீர்ப்பை வழங்கினார்.
அறியாமையே என்ற அணியில் திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவக்கண்மணிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அலட்சியமே என்ற அணியில் தர்மபுரி பண்பலை வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர். பட்டிமன்றம் இனிதே நிறைவடைந்தது. பட்டிமன்றத்திற்கான ஏற்பாடுகளை கணினி துறைத்தலைவர் முனைவர். சரவணன் அவர்களின் வழிநடத்துதலின் பேரில் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.விஜய் மற்றும் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. விமலா செய்திருந்தனர்.
தமிழ் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு இணையம் (முத்தமிழ் மன்றம்) வழங்கிய மாபெரும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி 03/02/18 அன்று நடை பெற்றது. 150 –க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர்.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை & தமிழ் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு இணையம் (முத்தமிழ் மன்றம்) இணைந்து வழங்கிய மாபெரும் பேச்சுப் போட்டி & கவிதைப் போட்டி 13.01.2016 அன்று நடை பெற்றது. 100 –க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர்.